முகப்பு
தமிழ்நாடு

சனிப்பெயர்ச்சி:  நளன் தீர்த்தக் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்

திருநள்ளாறில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நீராட வசதியாக நளன் குளம் தூர்வாரும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

திருநள்ளாறில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நீராட வசதியாக நளன் குளம் தூர்வாரும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வருகிற டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

இவ்விழாவிற்கான பல்வேறு முன்னேற்பாடுகளைக்  கோயில் நிர்வாகம் தொடங்கிவிட்டது. முக்கியப் பணியாக பக்தர்கள் நீராடும் நளன் தீர்த்தக் குளத்தின்  மையப் பகுதிக்குள் யாரும் செல்லமுடியாத வகையில்  தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.  குளத்தின்  மையப் பகுதியில் உள்ள த ண்ணீர்  கடந்த 2 நாள்களாக மோட்டார் மூலம் பம்ப் செய்து அகற்றப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்  தரப்பில் புதன்கிழமை தெரிவித்தது :  பக்தர்கள் நீராடக்கூடிய  பகுதியில் தற்போது தண்ணீர் உள்ளது.  நான்கு புறங்களில் ஒவ்வொரு புறமாக அடுத்த சில நாள்களில் அகற்றப்பட்டு, புதிதாக மணல் கொட்டப்பட்டு ஆழ்குழாய் மூலம் புதிதாக தண்ணீர் விடப்படும். குளத்தில் தண்ணீர் விடுவதற்கு என குளத்தின் அருகே 2 ஆழ்குழாய் உள்ளன. இதன் மூலம் தண்ணீர் 2 நாள்களில் நிரம்பிவிடும்  என தெரிவித்தனர்.

மேலும் கூறும்போது, கோயில் அருகே உள்ள பிரம்ம தீர்த்தம்,  சரஸ்வதி தீர்த்தம் ஆகியவை சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டு புதிதாக தண்ணீர் விடப்பட்டுள்ளதால், அந்த தீர்த்தக் குளங்கள் தூர்வாரவேண்டிய அவசியம் தற்போது இல்லை எனவும் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →