சொத்துக் குவிப்பு வழக்கு : சசிகலா உறவினர் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவின் உறவினருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவின் உறவினருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகளும், டிடிவி தினகரனின் தங்கையுமான ஸ்ரீதளதேவி மற்றும் அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன் மீது வருமானத்துக்கு அதிமாக ரூ.1.68 கோடி வரை சொத்துக் குவித்ததாக சிபிஐ கடந்த 1997-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை கடந்த 2008-ஆம் ஆண்டு விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாகநாதன், பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.20 லட்சம்
அபராதமும், அவரது மனைவி ஸ்ரீதளதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து இருவர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயசந்திரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.பாஸ்கரன், ரிசர்வ் வங்கியின் நாணயம்-ரூபாய் நோட்டு ஆய்வாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.