முகப்பு
தமிழ்நாடு

பேரறிவாளன் விடுதலை: சோனியாவுக்கு அற்புதம்மாள் வேண்டுகோள்

பேரறிவாளனின் விடுதலைக்கு உதவுமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியாகாந்திக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பேரறிவாளனின் விடுதலைக்கு உதவுமாறு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியாகாந்திக்கு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளின் தாயார் அற்புதம்மாள் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: பேரறிவாளன் குற்றமற்றவர் என்று ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். இந்த வழக்கை விசாரித்த தியாகராஜன், பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்துவிட்டதாக இப்போது தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகளில் ஒருவரான தாமஸ், சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், பேரறிவாளன் விடுதலைக்கு உதவி புரிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலைக்காக அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாயை நாங்கள் பார்த்தபோது, சோனியாகாந்தியைச் சந்தித்து வலியுறுத்துமாறு அவர் கூறினார். கருணாநிதியும் இதே கருத்தை முன்பு தெரிவித்தார். ஒரு தாயின் சிரமம், இன்னொரு தாய்க்குத்தான் தெரியும்.
எனவே, வழக்கை விசாரித்த அதிகாரியும், தீர்ப்பு கூறிய நீதிபதியும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், சோனியாகாந்தியும் விடுதலைக்கு உதவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →