இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள்: வைகோ குற்றச்சாட்டு
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்தரவதைகள் தொடர்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சித்தரவதைகள் தொடர்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் இருந்து ஐரோப்பியக் கண்டத்துக்கு அடைக்கலம் தேடி கடந்த ஜூலை 18-ஆம் தேதி வந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள், தங்களுக்கு நேர்ந்த சித்தரவதைகளை விவரித்திருக்கிறார்கள்.
2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தாக்குதலோடு தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முற்றுப் பெறவில்லை. அது இப்போதும் தொடர்கிறது என்பதையும் இந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியை அசோசியேடட் பிரஸ் செய்தி ஊடகம் , புகைப்படங்களுடன் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தியைப் பார்த்த மனித உரிமை அமைப்புகளும், மருத்துவர்களும் இலங்கைக்கு எதிராக திட்டவட்டமான முழுமையான நீதி விசாரணையை ஐ.நா. மன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன்றும் தொடர்கின்றன என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.