தமிழ்நாடு

கிரிக்கெட் மைதான குத்தகை பாக்கி விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கான குத்தகை பாக்கியைச் செலுத்தக் கோரி பிறப்பித்த நோட்டீஸை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு இரண்டு வார காலத்துக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கான குத்தகை கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதுப்பிக்கப்படவில்லை. குத்தகை புதுப்பித்தல் தொடர்பாக கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் குத்தகை பாக்கியாக ரூ.32 லட்சம் செலுத்தும்படி ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந் நிலையில், கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி ரூ.1,553 கோடி குத்தகை பாக்கி செலுத்தக் கோரி திருவல்லிக்கேணி- மயிலாப்பூர் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸை எதிர்த்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கிரிக்கெட் சங்கத்தின் 8 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர், வட்டாட்சியர் பிறப்பித்த நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உத்தரவாதம் அளித்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி அதுவரை கிரிக்கெட் சங்க கணக்கில் இருந்து பணம் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT