தமிழ்நாடு

இபிஎஸ், ஓபிஎஸ் வீட்டில் சோதனை நடத்தினால் உண்மை வெளிவரும்: விஜயகாந்த்

DIN


சென்னை: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வீடுகளிலும், அமைச்சர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ரேஷன் கடையில் சர்க்கரையின் விலையை உயர்த்தியதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேமுதிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்றுப் பேசிய விஜயகாந்த், ரேஷன் கடையில் சர்க்கரையின் விலையை உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அதிகபட்சம் ரூ.5 அளவுக்கு உயர்த்தியிருக்கலாம் என்றார்.

மேலும், தமிழகத்தில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைகள் குறித்து கேட்ட போது, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வீடுகளிலும், அமைச்சர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று விஜயகாந்த் பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலின் தாக்கம்: வெறிச்சோடிய சாத்தனூா் அணை பூங்கா

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா

அனைத்து குக்கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இருவா் கைது

கிரேன் கயிறு அறுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT