தமிழ்நாடு

முன்னாள் எம்எல்ஏ குழ.செல்லையா காலமானார்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி முன்னாள் எம்எல்ஏ குழ.செல்லையா (83) உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். 

DIN

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி முன்னாள் எம்எல்ஏ குழ.செல்லையா (83) உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். 
திமுகவில் இருந்த குழ.செல்லையா, கடந்த 1971-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பேராவூரணி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், அதிமுகவில் இணைந்து மாநில விவசாயப் பிரிவுச் செயலாளராக இருந்தார். 
குழ.செல்லையாவுக்கு செல்வி, புலவர் பூங்கோதை ஆகிய இரு மனைவிகள். இவர்களுக்கு குழ.செ.அருள்நம்பி, அன்புச்செல்வன், வளையாபதி ஆகிய 3 மகன்களும், அரும்பு, அமுதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். 
குழ.செல்லையாவின் இறுதி சடங்குகள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) மாலை 3 மணிக்கு அவரது சொந்த ஊரான பேராவூரணியை அடுத்த முதுகாடு கிராமத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 98651 64567.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

மணிப்பூரில் பிரதமர் மோடி!

செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!

இந்தியா - பாகிஸ்தான் உள்பட 7 போர்களை நிறுத்தினேன்; நான் தீர்க்காத ஒரே போர் இதுதான்! - டிரம்ப்

மோடியின் மணிப்பூர் பயணம் "கேலிக்கூத்தானது": ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

SCROLL FOR NEXT