முகப்பு
தமிழ்நாடு

மண்டபம் அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்! 

ராமேசுவரம் தாலுகா  மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை  சுங்கத்துறை இன்று பறிமுதல் செய்தது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

ராமேசுவரம்: ராமேசுவரம் தாலுகா  மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை  சுங்கத்துறை இன்று பறிமுதல் செய்தது.

ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அருகே உள்ள முயல் தீவு பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் சுங்க இலாகாவினருக்கு இன்று ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சுங்க இலாகா கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒரு இடத்தில் செம்மரக் கட்டைகள் குவியல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிந்தது.

அதில் இருந்த மொத்தம் 30 செம்மரக்கட்டைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மொத்த சந்தை மதிப்பு ரூ. 50 லட்சம் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.