தமிழ்நாடு

ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

DIN

ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல், உடனடியாக அமலுக்கு வந்தன.

இதுகுறித்து தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், 
ஆர்.கே. நகரில் போட்டியிடுவது குறித்து பாஜக மேலிடம் முடிவு செய்யும். தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே விருப்பம். 

இரட்டை இலை வழக்கில் எந்தவொரு முறைகேடும் நடக்கவில்லை. குற்றம்சாட்டுவதற்கு மட்டுமே காங்கிரஸ் உள்ளது. இரட்டை இலை சின்னம் பெற்ற எடப்பாடி பழனிசாமி அணிக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT