தமிழ்நாடு

சபரிமலை பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு: காவல் துறை அதிகாரி தகவல்

DIN

மண்டல பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று சபரிமலை கோயில் பாதுகாப்புப் பணிகள் ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் டி.ஜி.பி.யுமான சுதேஷ்குமார் கூறினார்.
இதுதொடர்பாக அவர், சபரிமலையில் செய்தியாளர்களிடம் கூறியது:
சபரிமலைக்கு தற்போது ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கண்காணிப்பு அதிகரிக்கப்படும்: விமானப் படை உதவியுடன் நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை சன்னிதான பகுதிகள், அவற்றின் அருகே உள்ள வனப்பகுதிகளைக் கண்காணிக்க மிக நவீன கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கேரள போலீஸாருடன் இணைந்து மத்தியப் பாதுகாப்பு படை வீரர்களும் பணியாற்றி வருகின்றனர்.
குடிநீர் தேவைக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும் குன்னார் அணைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதேபோல், குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டுவரும் பகுதிகளிலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் சுதேஷ்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT