தமிழ்நாடு

பண மோசடி வழக்கு: சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரம் மறுப்பு! 

DIN

புதுதில்லி: ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த பண மோசடி வழக்கில் விசாரணைக்காக சிபிஐ முன் ஆஜராக முடியாது என்று கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கார்த்தி சிதம்பரத்தின் தந்தை ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த பொழுது நடைபெற்ற ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில், சட்டவிரோதமாக பணப்பலன்களை பெற்றதாக கார்த்தி மீது சிபிஐ வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தினைக் கண்காணிக்கப்படும் நபராக சிபிஐ அறிவித்தது. இதனை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை விசாரணைக்காக சிபிஐ முன் ஆஜராகுமாறு கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது.

ஆனால் அவர் இன்று சிபிஐ முன் ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவருடைய வழக்கறிஞரான அருண் நடராஜன், சி பி ஐக்கு கடிதம் ஒன்றினை கார்த்தி சார்பாக அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஆனைக்காக நாங்கள் காத்துக் கொண்டிருப்பதால், செப்டம்பர் 26-ஆம் தேதியிட்டு எனது கட்சிக்காரருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டிஸினை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் இன்று நேரில் ஆஜராகுமாறு எனது கட்சிக்காரரை வலியுறுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.   

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் அனைவரையும் விடுவித்துள்ளது.

அவ்வாறு இருக்கையில் எனது கட்சிக்காரருக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது என்பது முற்றிலும் சட்ட விரோதமானது. அத்துடன் எனது கட்சிக்காரருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் தீய நோக்கம் கொண்டதாகும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது   

முன்னதாக கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் கார்த்தி சிதம்பரம் ஆஜராகவிலை என்பது குறிப்பிடத்தக்கது    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT