முகப்பு
தமிழ்நாடு

கட்சி அமைப்புத் தேர்தலுக்கு கையெழுத்திட்டார் கருணாநிதி!

திமுக அமைப்புத் தேர்தலை முன்னிட்டு கழக உறுப்பினர் படிவத்தில் அதன் தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் உள்ளார்.

எனவே திமுக-வின் செயல் தலைவராக அவரது மகனும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நலன் குறித்து அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரத்தில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

மேலும், அவ்வப்போது கருணாநிதியின் உடல்நலன் குறித்த புகைப்படமும், செய்தியும் திமுக-வால் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி கையெழுத்திடுவது போன்ற புகைப்படம் ஒன்றை திமுக சார்பில் வெள்ளிக்கிழமை (இன்று) வெளியிடப்பட்டது.

அதில், திமுக-வின் 15-ஆவது அமைப்புத் தேர்தல் நடைபெறுவதையொட்டி கழக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, உறுப்பினருக்கான கட்டணத்தையும் வழங்கி, கழக உறுப்பினராக கருணாநிதி தம்மை புதுப்பித்துக்கொண்டார்.

அப்போது, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முக்கியத் தலைவர்கள் உடன் இருந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →