தமிழ்நாடு

காவல் துறைக்கு பிரத்யேக முகநூல் பக்கம் தொடக்கம்

DIN

தமிழக காவல் துறைக்கென பிரத்யேக முகநூல் பக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
சேலம் மேட்டூரில் நிரந்தர காவல் பயிற்சி பள்ளி, நிர்வாகக் கட்டடங்கள், சென்னை புதுவண்ணாரப்பேட்டை, கோவை கோட்டூர், ராமநாதபுரம் நகரம், தொண்டி, தேனி, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, நெல்லை தாழையூத்து, தூத்துக்குடி குலசேகரப்பட்டினம், கயத்தாறு ஆகிய இடங்களில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்.
கோவை சாய்பாபா காலனி, முடீஸ், காஞ்சிபுரம் மாவட்டம் மகரல், தேனி குமுளி, அரியலூர், மதுரை, திருப்பூர் ஆகிய இடங்களில் ஆயுதப்படைக்காக கட்டப்பட்ட கட்டடங்கள், சென்னை ஆலந்தூரில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அலுவலகக் கட்டடங்கள், கோவை, சென்னை புழல் சிறைச் சாலை வளாகங்களில் புதிய கட்டடங்கள் என பல்வேறு கட்டடங்களை அவர் திறந்து வைத்தார்.
முகநூல் பக்கம்: தமிழக காவல் துறைக்கு புதிதாக தொடங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தையும் (Tamil Nadu Police) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT