தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும்

DIN

பெட்ரோல், டீசல் விலை மீதான வரிகளை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் சூழ்நிலையிலும், மத்திய அரசு தினமும் விலை நிர்ணயம் என்ற கொள்கையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் உயர்த்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் மீது தாங்கமுடியாத சுமை ஏற்றப்படுகிறது. மத்திய அரசு விலையை உயர்த்தும்போதெல்லாம் தமிழக அரசும் அதற்குத் துணையாக, வாய்மூடி மெளனியாக இருக்கிறது. 
இதே போன்ற சூழல் 2006-ஆம் ஆண்டு உருவானபோது, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்கும் பொருட்டு வரிகளைக் குறைத்தார். டீசல் விலை உயர்ந்தபோது, டீசலுக்கான விற்பனை வரி 25 சதவீதத்திலிருந்து 23.43 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பெட்ரோலுக்கான விலை உயர்ந்த போது, அதற்கான விற்பனை வரி குறைக்கப்பட்டது. திமுக ஆட்சியின்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி 6.57 சதவீதம் குறைக்கப்பட்டு, விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டது.
இதைப் போன்று குஜராத், மகாராஷ்டிர அரசுகளும் வரியைக் குறைத்துள்ளன. ஆனால், தமிழக அரசு மட்டும் டீசல் விலை உயர்வு பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், மதிப்புக்கூட்டு வரியைக் குறைத்து அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் இருப்பதும், மக்கள் படும் துயரங்கள் பற்றி அரசுக்குக் கவலையில்லை என்பதும் தெளிவாகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். ஏற்கெனவே, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவற்றுக்கான மதிப்புக்கூட்டு வரியையும் உடனடியாகக் குறைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT