தமிழ்நாடு

பாரதியார் பெயரில் மூத்த தமிழறிஞருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

DIN

பாரதியார் பெயரில் மூத்த தமிழறிஞருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருப்பதாக பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் 
ஆ. கணபதி தெரிவித்துள்ளார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு மாதமும் 11-ஆம் தேதி தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, "வையத் தலைமை கொள்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலியின் முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆ.கணபதி பேசியதாவது: இந்த ஆண்டு பாரதியாரின் பிறந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாட பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மூத்த தமிழறிஞர் ஒருவருக்கு "மகாகவி பாரதியார் வாழ்நாள் சாதனையாளர் விருது' என்ற பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கென குழு அமைக்கப்பட்டு அவர்கள் பாரதி குறித்தும், தமிழ் மொழி குறித்தும் ஆய்வு மேற்கொண்ட விருதுக்குரிய தமிழறிஞரைத் தேர்வு செய்வார்கள்.
பாரதியார் பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாக கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு "இளம் பாரதி' என்ற பெயரில் விருது வழங்கப்படும். அத்துடன் பாரதியார் பிறந்த நாள் விழாவில் பெரிய அளவிலான கலை நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT