தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையே மக்களின் கடைசி புகலிடமாக உள்ளது: கிரண்பேடி

தினமணி

புதுவையில் ஆளுநர் மாளிகையே மக்களின் கடைசி புகலிடமாக உள்ளது என ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஆளுநர் மாளிகையே புதுவை மக்களின் கடைசி புகலிடமாக உள்ளதால் தான் அது மக்கள் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது. அவர்களின் நலனுக்காக குறைகேட்பு கூட்டம், பார்வையாளர்கள் சந்திப்பு, சமூக கலாசார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதை தான் பிரதமர் மோடியும் வலியுறுத்தி உள்ளார். அனைத்து தரப்பைக் காட்டிலும் ஆளுநர் மாளிகை தான் மக்களின் நம்பத்தகுந்த இடமாக உள்ளது. 

நீதி, நிவாரணத்துக்காக வரும் மக்களின் நலனே முக்கியமாகும். மத்திய அரசுக்கும் யூனியன் பிரதேசத்துக்கும் இடையே இணைப்பு பாலமாக ஆளுநர் மாளிகை உள்ளது. குடியரசுத் தலைவரும் மாநாட்டில் பேசுகையில் எந்த தவறான தகவலையும் வெளிப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினார். பொதுமக்கள் நலன் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 

மக்களின் நம்பிக்கையை காப்பாறற வேண்டும். மாளிகையின் ஒவ்வொரு செயலும் மக்கள் நம்பும்படி இருக்க வேண்டும். ஆளுநர் மாளிகையின் மீதான நம்பிக்கை என்பது யூனியன் பிரதேசத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே உளள அரசியல் சட்ட இணைப்பின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையாகும் என்றார் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT