முகப்பு
தமிழ்நாடு

கொள்ளுப்பேரனுடன் கொஞ்சி மகிழ்ந்த கருணாநிதி (விடியோ)

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப் பேரனுடன் கொஞ்சி மகிழும் விடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற விடியோ சனிக்கிழமை வெளியானது.

இது வெளியான தருணத்திலேயே ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த விடியோவில் கருணாநிதி கொஞ்சி மகிழ்வது தனது பேரனும், நடிகருமான அருள்நிதியின் மகன் (கொள்ளுப்பேரன்).

அக்குழந்தையை கருணாநிதியின் மகனும், அருள்நிதியின் தந்தையுமான மு.க.தமிழரசு வைத்துள்ளார். கோபாலபுர இல்லத்தில் நடந்த இந்நிகழ்வின் போது கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் உடனிருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →