தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 97.85 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 23,327 கன அடியிலிருந்து 15,667 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 16 ஆயிரம் கன அடியிலிருந்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
அணையின் நீர் இருப்பு 62.89 டி.எம்.சி.யாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் மெல்ல சரியத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT