தமிழ்நாடு

கடந்த ஆண்டினை விட தீபாவளி நாளில் வருமானம் 20% குறைவு: டாஸ்மாக் நிர்வாகம் கவலை! 

DIN

சென்னை: கடந்த ஆண்டினை விட இவ்வாண்டு தீபாவளி நாளில் மது விற்பனை வருமானம் 20% குறைவு என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வருடா வருடம் தீபாவளி நாளில் மது விற்பனை செய்வதில் தமிழக அரசு சந்தைப்படுத்தல் ஆணையமான டாஸ்மாக் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூட மது விற்பனைக்கு என ரூ.500 கோடி இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இம்முறை தீபாவளி நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சில்லறை மது விற்பனை நிலையங்களில் ரூ.135 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டு தீபாவளி நாள் மது விற்பனை வருமான அளவை விட  20% குறைவாகும்.

மதுபானங்களின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டதற்கு பிறகு இந்த விற்பனை சரிவு நிகழ்ந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT