தமிழ்நாடு

பொறையார் அரசு போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் பலி

DIN

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்து பணிமனைக் கழக ஊழியர் ஓய்வு அறை கட்டடத்தின் மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொறையாரில் அரசு போக்குவரத்து பணிமனைக் கட்டடம் உள்ளது. அதில் உள்ள பணிமனைக் கழக ஊழியர்களின் ஓய்வு அறையின் மேற்கூரை திடீரென நள்ளிரவு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் போக்குவரத்து கழக ஊழியர் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள போக்குவரத்து கழக ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

பொறையாறு பணிமனை 1943-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

விபத்துக்கு குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், விபத்து குறித்து முதல்வரிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிவாரணம் குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் எனவும் தமிழகத்தில் பழைய கட்டடங்களில் இயங்கும் பணிமனைகள் அகற்றப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் அமைச்சரை உள்ளே விடாமல் பணிமனை வாயிற் கதவை பூட்டி ஊழியர்களுடன் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT