தமிழ்நாடு

பொறையார் பணிமனைக் கட்டட விபத்து: கட்டடங்களை ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறைக்கு உத்தரவு

DIN


சென்னை: அனைத்து போக்குவரத்துக் கழக மற்றும் பணிமனை  கட்டடங்களின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறையார் பணிமனை விபத்து தொடர்பாக போக்குவரத்துத் துறை பதில் தரவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரண தொகை வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் இலவச சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பொறையார் பணிமனை கட்டடம் இடிந்து விழுந்த விபத்து குறித்து தானே முன்வந்து விசாரித்த வழக்கில் உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையிட்டதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு ஏற்றது.

இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகளையும் சாட்சிகளாக வைத்துக் கொள்ளவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20ம் தேதி பொறையார் போக்குவரத்துக் கழக பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில்  8 பேர் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT