தமிழ்நாடு

பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது: உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தகவல்

DIN

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துவந்த அதிமுக எம்எம்ஏக்கள் 19 பேர், அவருக்கு நாங்கள் அளித்து வந்த ஆதரவை இழந்துள்ளதால் முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரை சந்தித்து தனித்தனியாக கடிதம் அளித்தனர்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு மீதான பெரும்பான்மை குறித்து வழக்குரைஞர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உள்கட்சி பிரச்னை என்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது. கட்சி பிளவுபட்டு மூன்றில் 2 பங்கை இழந்தால் மட்டுமே உத்தரவிட முடியும்.

எனவே, பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை உள்ளதாக முதல்வர் தரப்பிலான வாதம் வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT