தமிழ்நாடு

எங்கள் வீட்டு நிலைமை கிருஷ்ணசாமிக்குத் தெரியாது: மாணவி அனிதாவின் சகோதரர் கண்டனம்!

DIN

அரியலூர்: அரியலூரில் எங்கள் வீட்டு நிலைமை என்ன என்பதை கிருஷ்ணசாமி நேரில் பார்த்தது கிடையாது என்று மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.  

'நீட்' தேர்வின் காரணமாக மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார்.

அதன் பின்னர் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் சிபிஐ விசாரணை தேவை என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்தார்.

மேலும் அவர் அனிதா மரணத்தில் நிறைய சந்தேகங்களும் மர்மங்களும் ஒளிந்துள்ளதாக எண்ணுகிறோம். தகுந்த விசாரணை நடைபெறும் பொழுது உரிய ஆதாரங்களை எங்களால் வழங்க முடியும்.

நீட் எதிர்ப்பாளர்களின் தொடர் அழுத்தமே மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உச்ச நீதிமன்றத்தின் அனுதாபத்தினைப் பெற வேண்டும் என்ற நோக்கில் அனிதாவினை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக செயல்படும் தேச விரோத சக்திகளே அனிதா மரணத்துக்கு காரணம்.

தமிழகத்தில் மருத்துவக் கல்வியின் தரத்தினை உயர்த்தும் பொருட்டுதான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த போதும்,பாடத்திட்டத்தின் தரத்தினை உயர்த்தாத திமுக மற்றும் அதிமுக கட்சிகளும் இதற்கு காரணம்.

இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார். அத்துடன் புகழ்பெற்ற கல்வியாளர் ஒருவர் மீதும், திமுகவினைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் அவர் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் இன்று அரியலூர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேவையில்லாமல் எங்களுக்கு உதவியவர்கள் மீது அவதூறுகளைக் கூறி வருகிறார். அத்துடன் அரியலூரில் எங்கள் வீட்டு நிலைமை என்ன என்பதை கிருஷ்ணசாமி நேரில் பார்த்தது கூட கிடையாது.

இவ்வாறு மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT