தமிழ்நாடு

புதுவையில் இருந்து மைசூருக்குச் சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

கடந்த 16 நாள்களாகப் புதுச்சேரியில் தங்கி இருந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக மாநிலம், மைசூருவை அடுத்த கூர்க் மலைவாசஸ்தலத்துக்குச் சென்றனர்.

DIN

கடந்த 16 நாள்களாகப் புதுச்சேரியில் தங்கி இருந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக மாநிலம், மைசூருவை அடுத்த கூர்க் மலைவாசஸ்தலத்துக்குச் சென்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்த கடிதத்துக்கு எந்தப் பதிலும் வராத நிலையில், வியாழக்கிழமை டிடிவி தினகரனை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கினார். இதையடுத்து, புதுவையில் தங்கியிருந்த 16 எம்.எல்.ஏ.க்களும் சென்னை புறப்பட்டுச் சென்றனர். 
மேலும், சில எம்.எல்.ஏக்கள் சென்னையிலேயே தங்கி இருந்தனர். 
தொடர்ந்து அவர்கள் தினகரன் வீட்டில் ஆலோசனை நடத்திய பின்னர் ஆளுநரைச் சந்தித்தனர். இதனிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான ஜக்கையன் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து மீண்டும் புதுவைக்குத் திரும்ப திட்டமிட்டிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் திட்டத்தை மாற்றி, கர்நாடக மாநிலம், மைசூருவை அடுத்த கூர்க் மலைவாசஸ்தலத்துக்கு சென்று தங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே, அவர்கள் புதுவை சொகுசு விடுதியில் தங்கியிருந்த தங்களது அறைகளை காலி செய்வதாக விடுதி நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT