மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 69.05 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 14,751 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 31.89 டி.எம்.சியாக இருந்தது.
அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 52.65 டி.எம்.சியாக இருந்தால் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இம்மாத இறுதிக்குள் அணையின் நீர் இருப்பு 53 டி.எம்.சியாக உயரும் வாய்ப்பு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.