சென்னை: வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தெற்கு ஆந்திராவுக்கு அருகே வளிமண்டலத்தில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆலங்குடி, ஆர்.கே. பேட்டை, செய்யாறில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.