தமிழ்நாடு

சோத்துப்பாறை அணையில் நீர்வரத்து அதிகரிப்பு: முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து புதன்கிழமை, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாள்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு 39 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பெரியகுளம் பகுதி குடிநீர் தேவைக்காக 3 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 121 அடியாக உள்ளது. இந்நிலையில் பொதுப் பணித் துறை சார்பில் புதன்கிழமை காலை, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் அணையின் முழு கொள்ளவான 126.28 அடியை அடைந்ததும் இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என்றும், வியாழக்கிழமை அணை தனது முழு கொள்ளளவை எட்டியதும், உபரிநீர் அனைத்தும் உடனடியாக திறந்து விடப்படும் என்றும் பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT