முகப்பு
தமிழ்நாடு

134 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர்: பொள்ளாச்சி ஜெயராமன்

134 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

134 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பெரும்பான்மையை நிரூபிக்க எங்களுக்கு அவசியமில்லை. 134 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஆட்சிக்கு இடையூறு வந்தால் அனைவரும் ஒன்றாகிவிடுவார்கள். ஜக்கையன் வந்ததுபோல அனைத்து எம்எல்ஏக்களும் வந்து விடுவார்கள். 

18 எம்எல்ஏக்கள் தொடர்பாக சபாநாயகர் தனபால் முடிவெடுப்பார். 96 எம்எல்ஏக்களை வைத்து ஆட்சி நடத்திய திமுக எங்களை மைனாரிட்டி என்கிறது. தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சிக்கு களங்கம் விளைவித்து ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். 

உடனே முதல்வராக வேண்டும் என்கிற ஆசை ஸ்டாலினுக்கு உள்ளது. ஸ்டாலின் கனவு செயல் தலைவர் என்பதோடு முடிந்து விடும். தினகரன் அணியில் எங்களின் ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →