தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

DIN

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது : தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. கடந்தாண்டு சம்பா சாகுபடியும் பாதித்தது.
கர்நாடக அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை வழங்கவில்லை. ஆண்டுதோறும் வழங்க வேண்டிய 110 டிஎம்சி தண்ணீரில் 30 டிஎம்சி மட்டுமே நிகழாண்டில் தந்துள்ளது. ஆனால், கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. எனவே, மீதமுள்ள 90 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழகத்தில் தாய்மொழிக் கல்விக்குத்தான் தமாகா முதலிடம் கொடுக்கும். அடுத்து தொடர்பு மொழியான ஆங்கிலம், 3-ஆவது விருப்ப மொழி. இந்த அடிப்படையில்தான் கல்வி வழங்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட மொழியை திணிக்கவோ, கட்டாயமாக்கவோ கூடாது. நவோதயா பள்ளிகள் திறந்தாலும் அதில் தமிழ்மொழிக்கு தடை இருக்கக் கூடாது. அதிமுக பிரச்னைக்கு நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும்தான் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தேர்தல் வந்தால் கூட்டணி குறித்து தொண்டர்களின் மனநிலைப்படி முடிவு எடுக்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு நல்லமுறையில் பேசி, அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT