தமிழ்நாடு

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

DIN

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் பாபநாசம், மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நீடித்து வரும் மழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, பாபநாசம் கீழ் அணையில் 2 மி.மீ.,
கருப்பாநதி அணையில் 1 மி.மீ., குண்டாறு அணையில் 6 மி.மீ., அடவிநயினார் அணையில் 10 மி.மீ. மழையும் பதிவாகியிருந்தது.
பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 1400 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 200 கனஅடி, கடனாநதி அணைக்கு விநாடிக்கு 63 கனஅடி, கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 35 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 20 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 30 கனஅடி நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் மேலும் ஒன்றரை அடி உயர்ந்து 76.50 அடி, சேர்வலாறு அணை
நீர்மட்டம் 60.20 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1.10 அடி உயர்ந்து 39.60 அடி, கடனாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 60.70 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 65.75 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 48.56 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 85.75 அடி, வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 3.25 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 5.57 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 21 அடியாக இருந்தது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து குடிநீருக்காக 504.75 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 50 கனஅடி, ராமநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தலா 20 கனஅடி, குண்டாறு, கொடுமுடியாறு அணைகளில் இருந்து தலா 5 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT