தமிழ்நாடு

அரசு செயல்படாததால் மக்கள் பாதிப்பு: இரா. முத்தரசன்

DIN

அரசு செயல்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
தமிழகத்தில் நிலை இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு இயந்திரம் செயல்படாமல் உள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ஆதரவு பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழகத்தில் நீடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்குப் போதுமான ஆதரவு இல்லை என்பது குடியரசுத் தலைவர், ஆளுநர் என எல்லோருக்கும் தெரியும். அரசியல் சாசனத்தை அவர்கள் காப்பாற்ற வேண்டும். 
தமிழக பாஜக தலைவர்கள் பேசும் பேச்சும், அறிக்கைகளும் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக உள்ளது. இதைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜகவினர் முயற்சி செய்கின்றனர். இது வெறும் பகல் கனவாகவே முடியும். ஒரு போதும் பாஜகவின் முயற்சி பலிக்காது. 
கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என எல்லோரும் எதிர்த்த நவோதயா பள்ளியைத் தமிழகத்தில் திறக்க நீதிமன்ற உத்தரவை காட்டுகின்றனர். இதன் மூலம் இந்தியை தமிழகத்தில் திணிக்க முயற்சி செய்கின்றனர். இந்த விஷயத்தில் பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு உடந்தையாக இருக்கக் கூடாது என்றார் முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT