தமிழ்நாடு

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நான்கு அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

DIN

காற்றாலை மூலம் அதிக மின்சாரம் கிடைப்பதால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நான்கு அலகுகளில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் (யூனிட்) மூலம் தினமும் ஏறத்தாழ 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. காற்றாலை மூலம் அதிக மின்சாரம் கிடைப்பதால் இங்குள்ள 1, 2, 3 ஆகிய அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை 5 ஆவது அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தற்போது, அனல் மின்நிலையத்தில் 4 ஆவது அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 840 மெகாவாட் வரை மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை இரவு நிலவரப்படி 200 மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

மாநில சிலம்பப் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT