தமிழ்நாடு

18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது: மு.க. ஸ்டாலின்

DIN

18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆளுநரிடம் மனு அளித்ததை வைத்து 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக சபாநாயகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முதல்வரும், சபாநாயகருடன் கூட்டு சேர்ந்து ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளனர். குறுக்குவழியில் வாக்கெடுப்பு நடத்த முயற்சிக்கும் ஈபிஎஸ் அரசு மக்கள் மன்றத்தில் தோற்கடிக்கப்படும். 

ஈபிஎஸ் அரசை காப்பாற்ற தவறான வழியில் சென்று சபாநாயகர் பதவிக்குரிய மாண்பை கெடுத்துவிட்டார். பேரவையை சந்தித்து வெற்றி பெற முடியாத நிலையை தகுதிநீக்க நடவடிக்கை காட்டுகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதரணமான அரசியல் நெருக்கடிக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதனிடையே  திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் திமுக ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT