தமிழ்நாடு

புதுச்சேரியில் 778 மருத்துவ மாணவர்களை வெளியேற்றும் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

DIN

புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 778 பேரை நீக்கி இந்திய மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

2016-17ஆம் ஆண்டில் சென்டாக் மூலம் அல்லாமல், விதிகளை மீறி நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 770 மாணவ, மாணவிகளை 2 வாரங்களில் வெளியேற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) அண்மையில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து 778 மாணவர்களில் 108 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவ மாணவர்கள் 778 பேரை வெளியேற்ற அக்டோபர் 23ஆம் தேதி வரை இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் இதுதொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ), புதுச்சேரி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT