தமிழ்நாடு

முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று சொன்னோமே தவிர கட்சி மீது அல்ல: தினகரன் தரப்பு வாதம்

DIN


சென்னை: தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று சொன்னோமே தவிர, கட்சிக்கு எதிராக சொல்லவில்லை என்று தினகரன் தரப்பு வழக்குரைஞர் துஷ்யந்த் தவே கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர்  தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது.

உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி முன்னிலையில் மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதங்களை முன் வைக்கின்றனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் தரப்பில் வழக்குரைஞர் ராகேஷ் திவேதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் சார்பில் அரிமா சுந்தரம் ஆஜராகியுள்ளார். அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித் ஆகியோர் ஆஜராகினர்.

முதலில், தினகரன் தரப்பில் ஆஜரான துஷ்யந்த் தவே தனது வாதங்களை எடுத்துரைத்தார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது. அரசியல் சாசன விதி மீறப்பட்டுள்ளது.  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மேலும், எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க அவைத்தலைவர் தனபால் போதிய கால அவகாசமும் அளிக்கவில்லை என்றும் வழக்குரைஞர் தவே கூறினார்.

மேலும் அவர் தனது வாதத்தில், கொறடா உத்தரவை மீறாத நிலையில் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசை எதிர்த்த ஓபிஎஸ்-க்கு பதவி, கருத்துக் கூறிய எங்களுக்கு தகுதி நீக்கமா?

ஊழல் மிகுந்த அரசாக இருப்பதால் முதல்வருக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றோம் என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT