தமிழ்நாடு

குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி கிருபாகரன் வேதனை

DIN


சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பில் சுமை அதிகம் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம் என்று கவலை தெரிவித்தார்.

சிபிஎஸ்இ பாடத்தில் 1ம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. சிறு குழந்தைகளுக்கு இந்த அளவுக்கு பாடச் சுமையை கொடுப்பது சரியல்ல என்றும், பாடச் சுமையைக் குறைக்கவும் உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் புருஷோத்தமன் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், விளையாட வேண்டிய வயதில்  பள்ளிக்கு அனுப்பிவிட்டு குழந்தை பருவத்தை வீணடிக்கிறோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். இதுபோன்ற பல காரணங்களுக்காக குழந்தைகள் விளையாடும் நேரத்தை வீணடிக்கிறோம். ஆடிப்பாட வேண்டிய வயதில் குழந்தைகளை மௌனியாக வைத்திருக்கிறோம் என்று நீதிபதி கவலை தெரிவித்தார்.

மேலும், புருஷோத்தமனின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சிபிஎஸ்இக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி கிருபாகரன், 4 வாரத்தில் இது குறித்து முடிவு செய்யுமாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT