தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணையின் நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 11,849 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால், அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. 
உபரி நீர் காரணமாக வியாழக்கிழமை காலை நொடிக்கு 6,479 கன அடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 11,849 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 41.29 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.33 அடியாக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT