தமிழ்நாடு

நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.கே. சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று கிலென்ஈகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை

DIN

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.கே. சசிகலாவின் கணவர் எம்.நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று கிலென்ஈகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனையின் கல்லீரல் நோய்கள் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவின் இயக்குநர் டாக்டர் கே.இளங்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நீண்டகால கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிக்கும் எம்.நடராஜன்(74) கடந்த 9 மாதங்களாக எங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனை ஆலோசனை வழங்கியது.
கல்லீரல் செயலிழப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, நுரையீரல் சேதம் உள்ளிட்ட பிரச்னைகளுடன் மோசமான உடல் நிலையில் கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அண்மையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
தற்போது அவருக்கு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை உள்ளிட்ட பிற ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கு மாற்று உறுப்புகள் கிடைப்பதற்காக அவர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளார். நடராஜனின் குடும்பத்தினருக்கு அவரது உடல் நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் முகமது ரேலா தலைமையிலான குழுவினர் நடராஜனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

புதிய வருமான வரி விதிகள்: டிசம்பருக்குள் அறிவிக்கை

சி.பி.ராதாகிருஷ்ணன் - சுதா்சன் ரெட்டி இடையே நேரடி போட்டி

வேளாண்மையில் பட்டயப்படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT