தமிழ்நாடு

பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை திரும்பி

DIN

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை திரும்பி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அமைச்சர்கள் உள்ளிட்ட சில அதிமுகவினர் ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா மீது சந்தேகப் புகார்களைத் தெரிவித்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயார் என்று அறிவித்தார்.

சிபிஐ., சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் போன்ற எந்த விசாரணை ஆணையம் அமைத்தாலும் அவற்றைச் சந்தித்து தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை அளிப்போம் என தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில், ஜெயலலிதா இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று கடந்த மாதம் 17-ஆம் தேதியன்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 

ஒரு மாதத்துக்கு மேலாகியும், அதற்கான நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து திங்கள்கிழமை (செப். 25) அரசாணை வெளியிடப்பட்டது. 

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு விட வேண்டும் என ஆளுநரிடம் கூறி வந்த நிலையில், இதுகுறித்து எந்த பதிலையும் ஆளுநர் வெளியிடாமல் இருந்தார்.

இதையடுத்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பழனிசாமி அரசுக்கு எதிராக செயல்பட்ட 18 தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

தமிழக நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்தும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசனை நடத்தியதாகவும் சமீபத்தில்  செய்திகள் வெளியாகின.

ஏற்கனவே, பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய ஆளுநரின் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. 

ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைச்சர்கள் ஒவ்வொரும் தினந்தோறும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. 

பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுநீக்கம் செய்ய வேண்டும் என திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விசாரணை நாளை பெறுகிறது தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.  கடந்த வாரம் சென்னை வந்த ஆளுநர், ஓரிரு நாளில் மும்பை திரும்பினார்.

இந்நிலையில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை  10.45 மணியளவில் மும்பையில் இருந்து விமானம் சென்னை வந்துள்ளார். 

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் மும்பையிலிருந்து சென்னை திரும்பி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT