தமிழ்நாடு

இருசக்கர வாகனத்துக்கு சீட் பெல்ட்: அபராதம் விதித்த உதவி ஆய்வாளர் இடமாற்றம்

தினமணி

தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டி வந்ததாகக் கூறி அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிகாடைச் சேர்ந்த பாண்டியராஜ் (29) மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை அருகே உள்ள கூட்டுறவு வங்கிக்குப் பணம் செலுத்துவதற்காக மோட்டார் சைக்கிளில் செப். 21-ம் தேதி சென்றார்.

அப்போது அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட தாலுகா போலீசார் இவரது வாகனத்தை நிறுத்தினர். ஆவணங்களைக் காட்டிய இவருக்கு சீட் பெல்ட் அணியாமல் வந்ததாகக் கூறி ரூ. 500 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் பாண்டியராஜ் திங்கள்கிழமை புகார் செய்தார். இந்த மனு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து தாலுகா காவல் உதவி ஆய்வாளர் புனிதவல்லி தஞ்சாவூர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT