தமிழ்நாடு

இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட 6 படகுகள் ராமேசுவரம் வந்தடைந்தன

DIN

இலங்கையிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்ட 6 படகுகள், சனிக்கிழமை ராமேசுவரம் வந்தடைந்தன. 
இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 42 படகுகளில், முதல் கட்டமாக ராமேசுவரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 7 படகுகளை மீட்க செப்டம்பர் 27 ஆம் தேதி மண்டபத்திலிருந்து 7 படகுகளில் 53 மீனவர்கள் இலங்கைக்குச் சென்றனர். 
அந்நாட்டின் காரை நகர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை மீட்புக் குழு மீனவர்கள் சீரமைத்து மீட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், எந்த படகையும் இயக்க முடியவில்லை. இதனால், 7 படகுகளையும் கயிறு கட்டி ராமேசுவரம் பகுதிக்கு இழுத்து வந்தனர். சிறிது தொலைவு வந்தவுடன், மண்டபத்தைச் சேர்ந்த மெக்கல் என்பவரது படகு கடலில் மூழ்கியது. அதையடுத்து, மீண்டும் அந்தப் படகை காரை நகர் துறைமுகத்துக்கு இலங்கைக் கடற்படையினர் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, ஜெபதோட்டம், ஜேசு அருளானந்தம், நிஷந்தன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டவர்களின் 6 படகுகளை, ராமேசுவரம் துறைமுகத்துக்கு சனிக்கிழமை இழுத்து வந்தனர். படகுகளை மீன்வளத் துறை, சுங்கத் துறை மற்றும் இந்திய கடலோரக் காவல் படையினர், கடலோர காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
இது குறித்து மீனவ சங்கத் தலைவர்கள் ஜேசுராஜ் மற்றும் சகாயம் கூட்டாகத் தெரிவித்தது:
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டதமிழக மீனவர்களின் 180- க்கும் மேற்பட்ட படகுகள், இலங்கை துறைமுகங்களில் 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கடலில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால், மீண்டும் இந்தப் படகுகளை இயக்க வேண்டுமென்றால், குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை செலவாகும். ஏற்கெனவே படகுகளை இழந்து சிரமப்பட்டு வந்த மீனவர்கள் தற்போது படகுகளை சீரமைக்க முடியாததால், மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்கி படகு உரிமையாளரை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT