காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால் மட்டுமே ஐபிஎல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன்: சுமந்த் ராமன்
காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதற்கு இணையான அமைப்பை உருவாக்கும்வரை இந்த வருடம் எந்தவொரு ஐபிஎல் ஆட்டத்தையும் நேரில் சென்று...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்த வலியுறுத்தி, அரசியல் விமரிசகர் சுமந்த் ராமன் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:
நேற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து ட்வீட் செய்தேன். அப்போதுதான் யோசித்தேன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அனைவரும் போராடிக்கொண்டிருக்கும்போது ஐபிஎல் போட்டியை ரசிப்பது நியாயமா என்று. இச்சமயத்தில் அனைவருடைய ஒற்றுமை அவசியம்.
எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அல்லது அதற்கு இணையான அமைப்பை உருவாக்கும்வரை இந்த வருடம் எந்தவொரு ஐபிஎல் ஆட்டத்தையும் நேரில் சென்று பார்க்க மாட்டேன். அதேபோல ஐபிஎல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டேன். வாழ்க்கையில் சில விஷங்கள் ஒரு விளையாட்டுப் போட்டியை விடவும் பெரிதானவை. நம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க இது சரியான தருணம் என்று எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.