தமிழ்நாடு

எங்கள் விளக்கங்கள் திருப்தி அளிப்பதாக ஆளுநர் தெரிவித்தார்: முதல்வர் பழனிசாமி

Raghavendran

தமிழக போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கமளித்துள்ளோம். அதில் அவருக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அங்குள்ள பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவங்களை அடுத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், செவ்வாய்கிழமை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரைச் சந்தித்தார்.

இந்நிலையில், தமிழக ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் புதன்கிழமை இரவு 7:30 மணியளவில் சந்தித்தனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஜெயகுமார் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

தமிழகத்தில் நிலவும் காவிரி நீர் விவகாரம் உள்ளிட்ட போராட்டங்கள் குறித்த நிலவரங்களை கேட்டறியவே எங்களை அழைத்தார். தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து ஆளுநரிடம் விளக்கமளித்தோம். எங்களுடைய பதில்கள் திருப்திகரமாக இருந்ததாக ஆளுநர் கூறினார். இதில் மறைப்பதற்கு ரகசியங்கள் எதுவும் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT