முகப்பு
தமிழ்நாடு

குன்னூர் காவல் நிலைய வளாகத்தில் நுழைந்த காட்டெருமை

குன்னூர் காவல் நிலைய வளாகத்தில் காட்டெருமை திங்கள்கிழமை நுழைந்ததால் காவலர்கள், பொது மக்கள் அச்சத்துக்குள்ளாகினர்.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 12:43 AM
காவல் நிலைய படிக்கட்டில் இறங்கி வரும் காட்டெருமை.
பகிர்:

குன்னூர் காவல் நிலைய வளாகத்தில் காட்டெருமை திங்கள்கிழமை நுழைந்ததால் காவலர்கள், பொது மக்கள் அச்சத்துக்குள்ளாகினர்.
நீலகிரி மாவட்டம், மேல் குன்னூர் காவல் நிலையம் அருகில் உள்ள சோலையில் இருந்து வந்த காட்டெருமை அங்குள்ள காவல் நிலைய வளாகத்துக்குள் நுழைந்தது. இதனால் அங்கிருந்த காவலர்கள் அச்சமடைந்தனர். சற்று நேரம் அப்பகுதியில் நடமாடிய காட்டெருமை காவல் நிலைய படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி, சாலைக்கு வந்தது. 
காட்டெருமையைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்துக்குள்ளாகினர். அரை மணிநேரம் அப்பகுதியில் நடமாடிய காட்டெருமை பின்னர் அங்கிருந்து சோலைக்குள் சென்றுவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.