மோடிக்கு ஏற்ற எடப்பாடி பழனிசாமி: கொட்டும் மழையில் மு.க. ஸ்டாலின் பேச்சு
ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது போல், பிரதமர் மோடிக்கு ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கொட்டும் மழையில் நனைந்தபடி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
தஞ்சை: ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது போல், பிரதமர் மோடிக்கு ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கொட்டும் மழையில் நனைந்தபடி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
கடந்த சனிக்கிழமை மாலை திருச்சி முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கிய திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சியினர், 3வது நாளாக தஞ்சையில் பயணத்தைத் தொடங்கினர்.
தஞ்சையில் கொட்டும் மழையில், திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களிடையே பேசிய மு.க. ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தூங்குவது போல் நாடகமாடுகிறது. தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், தூங்குவது போல நடிப்பவர்களை எப்போதுமே எழுப்ப முடியாது.
Advertisement
மோடி அரசுக்கு ஏற்ப தமிழக அரசும் செயல்படுகிறது. ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது பழமொழி. அது போல, பிரதமர் மோடிக்கு ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று புதுமொழி சொல்லலாம் என்று ஸ்டாலின் கூறினார்.