தமிழ்நாடு

திமுக கருப்புக்கொடி என்றால் நாங்கள் பச்சைக்கொடி: தமிழக அமைச்சரின் 'அடடே' பேட்டி! 

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

DIN

விருதுநகர்: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, நிகழ்வு ஒன்றில் பங்கேற்க வரும் 12 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக , அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்றும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவதோடு அன்று கருப்பு சட்டை அணிய வேண்டும் என்றும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்நிலையில் தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்புக் கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சைக் கொடி காட்டுவார்கள். மத்திய அரசோடு மோதல் போக்கை கடைபிடிக்கும் எண்ணம் எல்லாம் சரி வராது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து சரியானது. காவிரி நீரைப் பெற பிரதமருக்கு உரிய அழுத்தம் கொடுப்போம். காவிரி விவகாரத்தில் மு.க.,ஸ்டாலினின் நடைபயணம் மக்களை திசை திருப்பும் ஒரு நாடகம்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்துளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கு: பெண் உள்பட 4 போ் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

SCROLL FOR NEXT