தமிழ்நாடு

லிம்கா சாதனைக்காக 2 மணி நேரத்தில் 180 அடி அகல ஓவியம்: வேலூர் பள்ளி மாணவிகள் அசத்தல்

DIN

லிம்கா சாதனை முயற்சியாக வேலூர் பள்ளி மாணவிகள் 80 பேர் இணைந்து 180 அடி அகல ஓவியத்தை 2 மணி நேரத்தில் வரைந்தனர். 4 வகையான ஓவியத்தை குறுகிய நேரத்தில் வரைந்து சாதனை புரிந்த மாணவிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
உலக ஓவிய தினத்தையொட்டி, வேலூர் சாய்நாதபுரத்திலுள்ள வி.வி.என்.கே.எம். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 80 பேர் இணைந்து லிம்கா சாதனை முயற்சியாக 180 அடி அகலத்தில் 2 மணி நேரத்தில் ஓவியங்களை வரைந்திட முடிவு செய்தனர். இதற்காக பள்ளி மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 
இதையடுத்து, மாணவிகள் திங்கள்கிழமை 180 அடி அகலத்தில் ஓவியம் வரைந்தனர். அதில், மரம் வளர்ப்பு, புவி வெப்பமயமாதல், பூமியைப் பாதுகாக்கும் கைகள், மரங்கள் வெட்டுதலை தடுத்தல் ஆகிய கருத்துகளை விளக்கம் வகையில், 4 ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. 
இந்த ஓவியங்களை 2 மணி நேரத்தில் வரைந்து முடித்து, லிம்கா சாதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த முயற்சியை லிம்கா குழுவினர் பரிசீலனை செய்து சான்றிதழ் வழங்குவர் என எதிர்பார்க்கப்படுவதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
மாணவிகளின் இந்த சாதனை முயற்சிக்குத் தேவையான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சிவக்குமார், ஓவிய ஆசிரியர்கள் நவக்குமார், பரிமளா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT