தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அரசியல் ஆதாயத்திற்காக பிரதமரை சந்திக்க ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருக்கிறார். துறை சார்பான அமைச்சரை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் மறுக்கின்றன. எதிர்க்கட்சிகளை சந்திப்பது குறித்து பிரதமர் அலுவலகமே முடிவு செய்யும்.

நீர் தரமாட்டேன் என கூறும் சித்தாரமையாவுக்கு திமுக ஆதரவளிக்கிறது. பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது. பேராசிரியை விவகாரத்தை தமிழக அரசும், ஆளுநரும் பார்த்துக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

பேராசிரியை நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT