ஜெயலலிதா மரணம்: நான் கூறியதாக வெளியான தகவல்கள் தவறு- ராம மோகன ராவ்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த போது அங்கே அமைச்சர்கள் இருந்தார்கள் என்று நான் கூறியதாக வெளியான தகவல்கள் தவறு என்று ராம மோகன ராவ் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த போது அங்கே அமைச்சர்கள் இருந்தார்கள் என்று நான் கூறியதாக வெளியான தகவல்கள் தவறு என்று ராம மோகன ராவ் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ராம மோகன ராவ், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்ட போது, ஒரு சில அமைச்சர்கள் அங்குதான் இருந்தார்கள் என்று விசாரணை ஆணையத்தில் நான் கூறியிருப்பதாக வெளியான தகவல்கள் தவறானது. நான் கூறியதாகச் சொல்லி தவறான தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
அன்றைய தினம், மாலை 6 மணிக்கு மேல் தான் நான் அங்கு வந்தேன். அப்போது தலைமைச் செயலராக இருந்ததால் ஏராளமான பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அதனால் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. மாரடைப்பு ஏற்பட்டபோது யார் யார் அங்கிருந்தார்கள் என்பதை நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.