தமிழ்நாடு

ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன்: எஸ்.வீ .சேகருக்கு எதிராக விஷால் ஆவேசம்! 

DIN

சென்னை: ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன் என்று பெண் ஊடகவியலாளர்கள் குறித்து கருத்துக் கூறிய நடிகர் எஸ்.வீ .சேகருக்கு எதிராக விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் திருமலை என்பவரின் பதிவை வியாழக்கிழமை பகிர்ந்திருந்தார். அப்பதிவில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து, அப்பதிவை எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்திலிருந்து அகற்றினார். தன்னுடைய செயலுக்கு மன்னிப்பும் கேட்டிருந்தார்.

இந்நிலையில் ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன் என்று பெண் ஊடகவியலாளர்கள் குறித்து கருத்துக் கூறிய நடிகர் எஸ்.வீ .சேகருக்கு எதிராக விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மீடியா துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தில் பெரியார் கண்ட கனவு நனவாகி வரும் நேரத்தில் மீடியாவில் பணிபுரியும் சகோதரிகளை களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பிய எஸ்.வி.சேகரின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

பத்திரிகைத்துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மனது இந்த அவதூறால் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை உணர்வேன். ஒரு நடிகனாக அல்லாமல் சக நண்பனாக கடும் கோபத்துக்குள்ளாகி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT